Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பங்கேற்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குநர் வ.கவுதமன் மற்றும் சுமார் 300 வரையானோர் கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு மெரினா கடற்கரையில் கூட்டம் நடத்தவோ, நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் மெரினாவில் இடம்பெறும் என்று என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்திருந்தார்.

இதனால் மெரினா கடற்கரையில் தடுப்புக் காவல் மையம் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

marina-rememberence (1)

marina-rememberence (2)

marina-rememberence (3)

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உருவப்படம் பதித்த, கருப்பு சட்டை மற்றும் டி-சர்ட்டுகள் அணிந்து வந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, திருவள்ளுவர் சிலையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்வை நடத்த  திருமுருகன் காந்தி, இயக்குநர் வ.கவுதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்ஈ ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் பேரணியாக சென்றனர். அவர்களுடன் மே 17 இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களும் பேரணியாக சென்றனர்.

தடையை மீறி பேரணியாகச் சென்றதாக இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து கண்ணகி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அங்கும் காவல்துறையினர் நுழைந்து அதில் பங்கேற்றவர்களை கைது செய்தனர். மீண்டும் திருவள்ளுவர் சிலையருகில் மற்றொரு தொகுதியில் அஞ்சலி நிகழ்வை நடத்த முயன்றனர்.

இதனால் மெரினாவில் நேற்றுமாலை பரபரப்பான நிலை காணப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *