சீனாவின் முன்முயற்சியில், அண்மையில் உருவாக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின், முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று பீஜிங்கில் ஆரம்பமாகிறது.
பீஜிங்கில் உள்ள உலக விடுதியில் இன்றும் நாளையும் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தக் கூட்டத்தில் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள எல்லா நாடுகளினதும் நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2014ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் யோசனையில் உருவாக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் சிறிலங்கா ஒரு நிறுவக நாடாக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.