முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் மீது உரையாற்றிய அவர்,
சிறிலங்காவில் உள்ள காணிகள் சிறிலங்கா முதலீட்டாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதற்கு தமது நாடுகளில் வைத்திருக்கும் காணிகளை சிறிலங்காவுக்கு விற்கமாட்டார்கள்.
எனவே, சிறிலங்காவின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பது சிறிலங்காவுக்கு சாதகமானது அல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.