சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கான ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து ஹரீம் பீரிஸ் இன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில், சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ பேச்சாளராக இருந்த ஹரீம் பீரிஸ், சிறிலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு மீள்கட்டுமானத் திட்டங்களைக் கண்காணிக்கும், உதவி, புனர்வாழ்வு, நல்லிணக்க பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பதவி வகித்திருந்தார்.