Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க உதவிச்செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க உதவிச்செயலர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரதரப்பு மற்றும் பரஸ்பர ஈடுபாடுள்ள விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

tom Malinowski -karunasena Hettiarachchitom-karunasena (2)

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியுடன், சிறிலங்காவின் கடற்படை, விமானப்படை, இராணுவத் தளபதிகளும், கடலோரக் காவற்படை தலைமை அதிகாரியும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, ரொம் மாலினோவ்ஸ்கியுடன், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர்,மான்பிரீத் ஆனந்த், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பிரதி தலைமை அதிகாரி ரொபேர்ட் ஹில்டன் ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *