சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி நிலையை முன்னேற்றுவதற்கு, 1.5 பில்லியன் டொலர் ( 220 பில்லியன் ரூபா) கடனுதவியை வழங்க அனைத்துலக நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, முதற்கட்டமாக, 168 மில்லியன் டொலர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.
எஞ்சிய கடன், காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆய்வுகளுக்குப் பின்னர், ஆறு கட்டங்களாக சிறிலங்காவுக்கு வழங்கப்படும் என்றும், அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும் நோக்கிலும், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்கவும், இந்தக் கடனுதவியை அனைத்துலக நாணய நிதியம் வழங்குகிறது.