சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றொரு தொகுதி உதவிப் பொருட்களை, ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்றுமாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது.
‘பிஎன்எஸ் பங்கபந்து’ என்ற இந்தப் போர்க்கப்பல், 105 தொன் எடையுள்ள உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நேற்று பிற்பகல் சிட்டகொங் கடற்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டது.
இந்தக் கப்பல், வரும் 5ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உயிர்காப்பு மருந்துகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், குடிநீர், கூடாரங்கள், உணவுப் பொருட்கள், மின்பிறப்பாக்கிகள் என்பன, எடுத்து வரப்பட்டு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.
மூன்று நாட்கள் கொழும்பில் தரித்து நிற்கும் பங்களாதேஸ் போர்க்கப்பல், ஜூன் 11ஆம் மீண்டும் சிட்டகொங் தளத்துக்குத் திரும்பும்.
கடந்த மாதம் 27ஆம் நாள் பங்களாதேஸ் விமானப்படை விமானம் ஒன்று முதல்கட்ட உதவிப் பொருட்களை கொழும்புக்கு ஏற்றி வந்தது. இரண்டாவது கட்டமாக கப்பல் மூம் உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.