தீவிரவாத விசாரணைப் பிரிவின் (ரிஐடி) முன்னாள் தலைவரான, ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு நேற்று மூன்று மணிநேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, கணக்கில் காட்டப்படாத தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள், தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபருக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒன்றை பரிமாற்றம் செய்தது குறித்தும், அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.