கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது.
சிறிலங்கா கடலோரக் காவல்படையின் கடல்பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் நோக்கில் ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது.
இதன் மூலம், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கடற்கொள்ளை முறியடிப்பு, கடல்கடந்த குற்றங்களை தடுத்தல், கடல்வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு, சிறிலங்கா கடலோரக்காவல்படைக்கு இரண்டு ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளன.
இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களும் 30 எம் ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஜப்பானில் கட்டப்படும் இந்தக் கப்பல்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் ஜப்பான் பயிற்சி அளிக்கவுள்ளது.
இந்த கொடையை வழங்குவது தொடர்பான உடன்பாட்டில் நேற்று சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர், கெனிச்சி சுகநுமாவும், சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும் கையெழுத்திட்டனர்.