Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » சிதம்பராக்கல்லூரி க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் 2016

சிதம்பராக்கல்லூரி க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் 2016

தற்போது வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுக்கு அமைவாக இருபது வருடங்களின் பின்பு இரு மாணவர்கள் சிதம்பராக்கல்லூரியில் கல்வி பயின்று மருத்துவதுறைக்கு செல்லவுள்ளனர்.

Biology

K.Karunaruban  2A, B

M.Puvithra      A, 2B

Y.Abirami       B, 2C

Arts

R.Thasanthini   A, 2C

யுத்த சூழ்நிலை காரணமாக க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகள் நிறுத்தப்பட்டு வல்வெட்டித்துறை கல்வியில் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. 2011 VEDA நிர்வாக சபை உறுப்பினர்கள், சிதம்பராகல்லூரி பழையமாணவர் சங்க செயலாளர் மற்றும் பெற்றோர்கள்  வலய கல்வி பணிப்பாளரை சந்தித்து கணித பிரிவுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2012 இல் ஆரம்பிக்கபட்டது.

2012 இல் லண்டனில் இருந்து சென்ற சுவாமி ராஜேந்திரா மாஸ்டரினால் சிதம்பரா பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பங்களிப்புடன் மிகச்சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடங்கள் கணனி தொடர்பாடல் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் என்பன குறுகிய காலப்பகுதிக்குள் அபிவிருத்தி செய்யப்பட்டது. தற்போது பொறியியல், மருத்துவ துறைகளுக்கு வல்வை மாணவர்கள் சிதம்பராக்கல்லூரியில் கல்வியை தொடர முழு வசதிகளும் தரப்பட்டுள்ளது.

கடுமையான முயட்சி செய்து பாடசாலைக்கு நற்பெயரினைத் தேடிக்கொடுத்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Chithambara OSA International

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *