வடமாகாண கல்வித்தரத்தை உயர்த்த கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றது. கல்வியில் அடைந்த பின்னடைவை செயலாளர் ஏற்றுக்கொண்டு
அதற்கான காரணங்களை ஆராய்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
வடமாகாண கல்வி மாநாட்டில் ( லண்டன் ) இவற்றின் முழு விபரங்களும் புலம்பெயர்
கல்வியாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. தமது கல்வி மற்றும் தொழில் நுட்ப திறன்கள
தந்துதவி முழு ஆதரவையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
பாடசாலை அதிபர் தலைவராக இல்லாத பழைய மாணவர் சங்கங்கள் யாவும் கலைக்கப்பட்டு
அதிபரை தலைமைத்துவமாக கொண்ட பழைய மாணவர் சங்கங்கள் உருவாக்கபட்டு கல்வி
திணைகளத்தின் கணக்காய்வுக்கு உட்படுத்தபடும். இதற்கான சுற்று நிருபங்கள் ஏற்கனவே
அனுப்பியுள்ளதாகவும் மாநாட்டில் தெரிவிக்கபட்டது.
சிதம்பராகல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் 14 வருடங்களுக்கு மேல் பொதுக்கூட்டம்
கூட்டபடாமல் இயங்குகின்றது. யார் தலைவர் செயலாளர் பொருளாளர் என்று அச்சங்கத்தின்
நிரந்தர உறுப்பினர்களுக்கே தெரியாது. சிதம்பராகல்லூரிக்காக ஒரு கோடி ரூபாக்கு மேல்
நிரந்தர வைப்புக்கென புலம்பெயர் வல்வை மற்றும் பழைய மாணவர்கள் இச்சங்கத்துக்கு
நன்கொடை அளித்துள்ளனர். இந்த நிரந்தர வைப்புக்கான வட்டி மற்றும் கணக்கு விபரங்கள்
இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை. அண்மையில் இடம்பெற்ற சிதம்பரா கல்லுரி
பழைய மாணவர் நலன்விரும்பிகள் ஒன்றுகூடலில் 70 லட்சமே உள்ளதாக கூறப்பட்டது.
நன்கொடையளிகள் மற்றும் வெளிநாடுகளில் இதற்காக நிதி சேகரித்தவர்கள் கணக்கு
விபரங்களை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கபட்டுள்ளது. இதன்
காரணமாக இவர்களின் பங்களிப்பு தடைபட்டுள்ளது.
இதற்கான தீர்வாக அதிபரை தலைவராக பதவி வழியாக சிதம்பராகல்லுரி பழைய மாணவர்
சங்கதுக்கு நியமித்து கொழும்பு பழைய மாணவர் சங்க கணக்குகள் கல்வி திணைக்களத்தின்
கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கணக்காய்வு அறிக்கைகள் வல்வை
இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் புலம் பெயர் நன்கொடையாளிகள் கவனத்துக்கு
கொண்டு வரலாம். தற்போது நிறுத்தப்பட்டுள்ள இவர்களின் அதீத பங்களிப்பு
தொடர்வதற்கான வழி உருவாக்கப்படும்.