Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » சிதம்பராகல்லூரியில் 15 மில்லியன் மாடிகட்டிட பணிகளை ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு பணிப்பு

சிதம்பராகல்லூரியில் 15 மில்லியன் மாடிகட்டிட பணிகளை ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு பணிப்பு

CHITHAMBARA OSA INTERNATIONAL கொடுக்கப்பட்ட  இரு வார அவகாசத்தில் இதற்குரிய காணி கொள்வனவு திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததின் பயனாக திரு ராசா இரவீந்திரன் (செயலாளர், கல்வி அமைச்சு, வட மாகாணம்) மாடிகட்டிட பணிகளை ஆரம்பிப்பதாக லண்டனில் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு சர்வதேச ரீதியாக இயங்கும் எமக்கு மின்னஞ்சல் ஊடாக  உறுதிப்படுத்தியுள்ளார். போர் முடிவுற்ற பின் வல்வையின் கல்வி வளர்ச்சிக்கு “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” புதிய செயல்த்திட்டம் 2016 கிடைக்கப்பெற்ற முதலாவது பெரிய நிதி ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2012 இல்  1000 பாடசாலை திட்டத்தில் சிதம்பரகல்லூரி இணைக்கப்பட்டிருந்தும் வினைத்திறன் அற்ற செயற்பாடினால் மிகப் பெரிய கல்வி அபிவிருத்தி எம்மை விட்டு சென்றது கசப்பான உண்மை. இதனை நிவர்த்தி செய்ய சிதம்பரா பழைய மாணவர் நலன் விரும்பிகளால் 2015 இல் CHITHAMBARA OSA INTERNATIONAL சட்ட பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து சர்வதேச அளவில் இயங்க ஆரம்பித்தது. “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தில் செயலாளர்  15 மில்லியன் மாடிகட்டிடத்திற்காக ஒதுங்கியிருந்தார். நிலப்பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் கைகூடாமல் போகும் நிலையில் இரு வார கால அவகாசம் அமைச்சினால் வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள காணி உரிமையாளரிடம் இதற்குரிய விலை நிர்ணயிக்கப்பட்டு நில அளவையாளரின் வரைபடம் அதிபரின் வேண்டுகோள் கடிதத்துடன் இணைக்கப்பட்டது.

நிர்வாக சபை உறுப்பினர்கள் உலக வல்வை மக்களின் கவனத்திற்கு “வல்வை ஒன்றியம்” whatsup ஊடக கொண்டு வந்தனர். அதிபரின் காணி கொள்வனவு கடிதம்  கிடைக்கப்பெற்று வல்வை அமைப்புகளின் மின்னஞ்சல் பெறப்பட்டு வல்வை பழைய மாணவர் சங்கமூடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எமது நிர்வாக சபை உறுப்பினர்கள் வல்வை அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவசர காணி கொள்வனவின் அவசியத்தை வலியுறுத்தியதன் விளைவாக  18-09-2016 ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கதின் 12 வது நிர்வாகசபை கூட்டத்தில்  2000 AUD வழங்க முடிவு செய்யப்பட்டது. கனடா நலன்புரி சங்க தலைவர் ஒரு பரப்புக்குரிய நிதியை உடனடியாக லண்டனில் வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டார். டென்மார்க் சுவிஸ் இந்தியா வல்வை மக்கள் முழு ஆதரவு தெரிவித்து நிதி உதவி அளிக்க முன்வந்தனர். இந்நிலையில் பிரித்தானிய வல்வை நலன்புரி சங்கதின் தலைவரினால் 4 பரப்பு காணிக்குரிய நிதி வழங்கியிருப்பதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார். அதனை அடுத்து நிதி சேகரிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

23-09-2016 அன்று CHITHAMBARA OSA INTERNATIONAL கடனடிப்படையில் பெறப்பட்ட 12500.00 பவுண்ட் காணி உரிமையாளரின் வங்கியில் வைப்பிட்டதை தொடர்ந்து காணி விற்கும் அதிகாரமுள்ளவர் (power of attorney) கொழும்பிலிருந்து சிதம்பராக்கல்லூரிக்கு சென்று நில அளவீடு செய்து plan பெறப்பட்டு 4 பரப்பு காணி சிதம்பராக்கல்லூரிக்கு 28-09-2016 அன்று எழுதப்பட்டது. காணி உரிமையாளரிடமிருந்து  12500.00 பவுண்ட்  CHITHAMBARA OSA INTERNATIONAL இற்கு மீளளிக்கப்பட்டது. 4 பரப்பு காணி கொள்வனவுக்கு நிதி உதவியளித்த பிரித்தானிய வல்வை நலன்புரி சங்கதிற்கு கல்லூரி சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

அத்துடன் இத்திட்டத்திற்கு முழு ஆதரவளித்த  ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், சுவிஸ், இந்தியா வல்வை மக்களுக்கும்  CHITHAMBARA OSA INTERNATIONAL உடன் பணி புரிந்த சிதம்பரா பழைய மாணவர் நலன் விரும்பிகளுக்கும் கல்லூரி சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

CHITHAMBARA OSA INTERNATIONAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *