சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கத் திட்டமிட்டிருந்த சம்பூர் அனல் மின் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள இந்திய தூதரக பேச்சாளர், எஷா சிறிவத்சவா, ‘சம்பூர் விவகாரம் தொடர்பாக எந்த விடயங்களையும் சிறிலங்கா அரசாங்கம் இதுவரையில் தெரியப்படுத்தவில்லை ‘என்று கு