கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மன்னிப்புக் கோரியதையடுத்தே, கடற்படை முகாம்களுக்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
“சம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் கடற்படையிடம், எழுத்து மூலம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பு அதனை ஏற்றுக் கொண்டதையடுத்தே, அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கிழக்கு முதலமைச்சர் வெளியிட்டிருந்த கடிதம் ஒன்றில், தாம் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்க, முப்படைகளும் எடுத்த முடிவு, அரசியல் ரீதியானது என்று கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.