கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக சிறிலங்கா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மூத்த படை அதிகாரிகள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.