காணாமற்போனோர் தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3000 முறைப்பாடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் தொடர்பாக, ஆணைக்குழுவிடம், 22 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில், 3 ஆயிரம் முறைப்பாடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.
இதையடுத்து, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 19 ஆயிரமாக குறைந்துள்ளது.
ஆணைக்குழுவின் பணிக்காலத்தை வரும் ஓகஸ்ட் 30ஆம் நாளுக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்குள், முறைப்பாடுகள் அனைத்தும், சரிபார்க்கப்பட்டு, இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டு, காணாமற்போனோர் தொடர்பான இறுதியான எண்ணிக்கையை கணிப்பிட முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.