சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரான்சுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போது, இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் சூழலை அபிவிருத்தி செய்வதற்கு, உதவுவதற்குத் தாம் எதிர்பார்த்துள்ளதாக, இந்தச் சந்திப்பின் போது, எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.