சிறிலங்கா விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
1981 ஆம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையில் இணைந்து கொண்ட எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள, 33 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில் நேற்று முன்தினத்துடன் ஓய்வுபெற்றார்.
இவர் சிறிலங்காவின் நான்கு முன்னாள் அதிபர்களான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் மிக முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தி விமானியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்றுச் செல்லும், எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.