Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Articals » எமக்கு நாமே ஆறுதல்

எமக்கு நாமே ஆறுதல்

எமக்கு நாமே ஆறுதல் எம்மை காக்க எம் உறவுகளான புலம்பெயர் உறவுகள் சிலரின் பணம், பலம், ஆதரவு வெறும் கவர்ச்சி அரசியல் விளம்பரத்தை நம்பி திசை மாறிப்போகும் நிலையில். அதனால் எமக்கான ஆதரவு சிதைந்து பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு போகவேண்டிய நிதிகள் குறைவடைந்ததுதான் மிச்சம்.

ஆறு கோடி தமிழர் இருந்தும் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட எங்களிடம்தான் பெரும் நிதி சேகரிக்க முடியும் அவர்களால். அதற்காக பாடுபட்ட ஐயா பழ நெடுமாறன் ஐயா வீரசந்தானம் போன்றோரை மதிக்கிறேன் ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்! அவ்வளவுதான் தமிழக தமிழர்களின் எங்கள் மீதுள்ள பற்று.

பக்கத்திலே இந்தியா தமிழ் நாடு இருக்கென்று 30 வருடத்துக்கு முன் ஓடிச்சென்ற நம் ஈழத்து மக்கள் இன்றும் அவர்கள் ஈழத்தில் வாழ்ந்ததை விட மிக கஸ்ரமான சூழலில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். இவர்களே வெறும் 6,7 வருடத்துக்குள் ஐரோப்ப அல்லது ஆபிரிக்க நாட்டுக்கு வந்திருந்தால் எப்படி நிலமை மாறியிருக்கும். இவர்களின் கௌரவமான வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக அரசோ அல்லது தனி நபர்களோ முன் வரமில்லை பாடு படவுமில்லை இனியுமா?

இவையெல்லாம் ஏன் நான் கோடி சம்பளம் வாங்குகுகிறேன் என்று பில்டப் விடும் தமிழ் நடிகர்கள் 50 க்கு மேல் இருக்க அவர்கள் தங்களுக்கென்று ஒரு கட்டிடம் கட்டுவதற்கு வெறும்18 கோடி ரூபாவுக்கு பிச்சை எடுக்கும்போது கூட ஈழத்தமிழர் இருவர் தனித்தனியாக 1 கோடி ரூபா அன்பளிப்பு செய்தார்கள்(Lyca, Lebra முதலாளிகள்) அதுதான் ஒரு தனி நபராக கொடுத்த அதிக நன்கொடை(இது உங்களுக்கு வியப்பாக இல்லை) தானத்திற்கும், தியாகத்திற்கும் ஈழத்தமிழர்கள்தான் இதை சில புடுங்கிகளும் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் மிக ஏமாளிகளும் இங்கேதான் இருக்கிறார்கள். விளம்பர தாரிகளும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் முகறம் அறம் காப்பகம் என்று ஏதும் தங்களின் பெயரில் தங்கள் விளம்பரத்துக்காக நடத்துவார்கள். எம் மக்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்க எங்கேயோ காசை அனுப்புவார்கள்.

கத்திக்கத்தி அரசியல் செய்யுங்கள் கத்தாமல் செய்யுங்கள் வெற்றியடையுங்கள் அல்லது வெல்லாமல் போங்கள். நீங்கள்(தமிழர்) வென்றால் சந்தோசப்படுவோம். ஆனால் ஒன்று எம்மக்கள் ஆயிரக்கணக்கில் குற்றுயிராக இன்றும் எம் ஈழ தேசத்தில் இருக்கும் நேரத்தில் எனக்கு உதவி செய்யுங்கள் நான் வந்தால்…….. என்று எங்கள் கையை பிடித்து பிச்சை கேக்காதீர்கள். கேட்டால் அழும் நிலையில்தான் உண்மையான தன்மானமுள்ள ஈழத்தமிழன் இன்று இருக்கின்றான் என்பதை மறவாதீர்கள். எங்களுக்கு ஆயிரம் கவலை இருக்கு.

ஆரம்ப காலத்தில் எமக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் உதவி புரிந்து ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். ஆனால் அந்த நல்ல மனிதர்களை அங்கு இருப்பவர்களும் சரி நம்மில் உள்ள சிலரும் இன்று மதிப்பதில்லை வெறும் மாயைகளில் இறங்கியுள்ளனர் எவ்வளவு தியாகம் இருக்கோ அவ்வளவு ஏமாற்றும் இருக்கு என்பதை மறுக்கேலாது.

இது ஏமாளிகளுக்கு சமர்ப்பணம்-:
சென்னையில் வெள்ளப்பெருக்கு பல தமிழக ஏழை மீனவர்கள் தங்கள் படகுகளை கொண்டு  தங்கள் உயிரையும் மதிக்காமல் வந்து மீட்பு பணியில் இறங்கி பல்லாயிரம் பேரை காப்பாற்றி பல நூறு இடங்களுக்கு உணவு விநியோகம் செய்தார்கள் தங்கள் படகு மூலம். ஆனால் ஒருவர் தன் திருமண வீட்டு விருந்துக்கு 500 ஆடு வெட்டி விருந்து படைத்தவர்(அந்த மீனவன் தன் திருமண விருந்தில் 1 ஆடு வெட்டியிருப்பானோ தெரியாது) தன்னிடம் வசதி இல்லையாம் என உயிர் மூங்கில வெட்டி முழங்கால் அளவு தண்ணீரில் நால்வர் இழுக்க நடுவில் நின்று போட்டோ ஒன்று முகநூலில் போட நம் ஈழத்து கொடை வள்ளல்கள் என்னிடமும் வந்தார்கள் வசூலிக்க எங்கள் அண்ணனிடம் காசில்லை என்று(இதை விட கொடுமை உலகத்தில் உண்டா)

யாருக்கு யாரிடம் உதவி பெற வேண்டும் என்ற விவஸ்தை இல்லாதவனும் முதலில் காலம்காலமாக நொந்து போயிருக்கும் இன்றவரைக்கும் குற்றுயிராக இருக்கும் எம்மவனுக்கும் உதவி செய்யாமல் வெறும் விளம்பர மாயையில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவனும் நினைத்துப்பாருங்கள் அன்று எமது தலைவனுக்கு கை கொடுத்த கொடை வள்ளல் மதிப்பிட்குரிய MGR மற்றும் தமிழக மக்களில் சிலரை அவர்களுக்குதான் தெரியும் எங்களின் நிலை. மீண்டும் ஒரு உசுப்பேத்தலுக்கு தயார் ஆகுமுன் உங்களுக்கான(ஈழத்து மக்களுக்கு) முக்கியமான தேவை என்ன என்பதில் விளிப்பாயிருங்கள்.

ஆனால் ஒன்று நீண்ட போரினால் பல இழப்புகளை சந்தித்த மக்கள் மீழ்வதற்கு குறைந்தது 25 வருடமாவது தேவை என்பதை நினைவில் வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *