Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க தளபதிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க தளபதிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

22 ஆவது அனைத்துலக கடல் சக்தி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளுக்கான தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிச்சட்சன் மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படையின் தளபதி அட்மிரல் .ஸ்கொட் எச்.ஸ்விப்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

தற்போதைய மற்றும் எதிர்காலப் பயிற்சிகள், நிபுணத்துவ மற்றும் அனுபவ பரிமாற்றங்கள், கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஏனைய பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்களை உள்ளடக்கியதாக, இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

us-lanka-navy-commanders-1us-lanka-navy-commanders-2

வலுவான கடல்சார் பங்காளர்கள் என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான அனைத்துலக கடல் சக்தி கருத்தரங்கு, ரோட் தீவில் நியூபோர்ட் நகரில் உள்ள அமெரிக்க போர்க் கல்லூரியில், இடம்பெற்று வருகிறது.

நேற்று ஆரம்பமான இந்தக் கருத்தரங்கு நாளை வரை இடம்பெறவுள்ளது. இதில் 80 நாடுகளின் கடற்படைத் தளபதிகளும், 15 நாடுகளின் கடலோரக் காவல்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *