வடமாகாணத்தில் கணித பாடத்தில் 50 வீதத்திற்கு குறைவானவர்களே சித்தியடைகின்றனர். கணித, விஞ்ஞான பாடங்களை உயர்தர வகுப்புக்கு தெரிவு செய்பவர்கள் 20 வீதத்திற்கும் குறைவாக உள்ளனர். ஏற்கனவே கணித, விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் 20 வீதமானவர்கள் மட்டுமே உயர்தர வகுப்புக்கு கணித விஞ்ஞான பாடங்களைத் தெரிவு செய்தால் 2020 இல் உயர்தர வகுப்புகளுக்கு கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கு முடியாத நிலையேற்படும் என யாழ் பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது. வெளிப்படையாக கண்ணுக்கு புலப்படாத வீழ்ச்சியை நோக்கி வட மாகாணத்தின் கல்வி நிலை சென்று கொண்டிருக்கின்றது.
வடமாகாண உயர்தரப் பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு 2075 ஆசிரியர்கள் தேவையாக இருந்த போதிலும், 1841 ஆசிரியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர். இதனால் 224 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளது. பிரபல்யமான பாடசாலைகளில் முதலில் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு எங்கள் பாடசாலையில் அனுபவமில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடத்தெரிவுக்கு தகுதியுள்ள மாணவர்களும் ஒளியிழந்து இருளில் மூழ்கிக்கிடக்கின்ற பாதைகளூடாக சைகிளில் நெல்லியடிக்கு மலை நேர வகுப்புகளுக்கு சென்று திரும்புவது காரணமாக கலை வர்த்தக பாடங்களுக்கு மாறுகின்றனர். வல்வெட்டித்துறை பெற்றோர் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கிணங்க VEDA வில் உயர்தர கணித-விஞ்ஞான மேலதிக வகுப்புகள் சென்ற வருடம் 2018 A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக தொடக்கப்பட்டு இந்தவருடம் 2019 A/L மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை 02/01/2017 ஆரம்பமாகவுள்ளது.
கனடா வல்வெட்டித்துறை மக்கள் ரூ113000.00 நிதியுதவியாக VEDA கல்வி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். வல்வையில் விஞ்ஞான கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் செயலாற்றிய கனடா வல்வெட்டித்துறை மக்களுக்கு எங்களின் நன்றிகள். 2019 A/L வகுப்புகள் கனடா, ஆஸ்திரேலியா வாழ் வல்வெட்டித்துறை மக்களின் முழு பங்களிப்புடன் நடத்தப்படுவது புத்தாண்டு நற்செய்தியாக அமையட்டும்.
Chithambara OSA International