விஞ்ஞான தொழில்நுட்பத்துறை என்பது இன்றைய உலகில் இன்றிமையாத ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை பாடசாலை மட்டங்களிலிருந்து, மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு உயர்தர கணித விஞ்ஞான பாடங்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை ஓர் தடையாக உள்ளது. உயர்தர கல்வியில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கின்ற மாணவர் வீதம் மிகவும் குறைவடைந்துள்ளது. வணிக, கலைப் பிரிவுகளை மாத்திரமே அதிக மாணவர்கள் தெரிவு செய்கின்றனர். விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கான தேர்ச்சி பெற்ற போதுமான ஆசிரியர்கள் யாழ் மாவட்டத்தில் இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொறியியல், தொழில்நுட்பம், வைத்தியம் உள்ளிட்ட முக்கியதுறை சார்ந்தவர்களை உருவாக்குவதில் வட மாகாணம் பின்னிற்கின்றது. இது எமக்கு பாரிய பின்னடைவாகும்.
உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி பயின்றுவரும் வல்வை மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதுடன் தற்போது முழுமையாக நிரப்ப முடியாமலிருக்கும் யாழ் பல்கலைகழகத்திட்கு அவசியமான கணித, விஞ்ஞான ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயட்படும் Chithambara College OSA (International) வல்வை 73 அமைப்பின் பங்களிப்புடன் நடத்தப்படும் உயர்தர கணித /விஞ்ஞான மாணவர்களுக்கான பாட பயிற்சி புத்தகங்களை வழங்க தீர்மானித்துள்ளது.
உயர்தர கணித ஆசிரியர் மற்றும் VEDA நிர்வாகத்தின் கோரிக்கைகிணங்க உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து இப்புத்தகங்களை தருவித்து சிதம்பராகல்லூரி நலன்பிரும்பி திரு.பாலசிங்கம் பாலேஸ்வரன் ஊடாக அன்பளிப்பு செய்கின்றோம்.
Chithambara College OSA (International)