சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.