கொஸ்கம– சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு, விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி நியமிப்பார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்குச் சமாந்தரமாக இராணுவ நீதிமன்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், வவுனியாவில் உள்ள ஆயுதக்கிடங்கு மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருந்தது என்பதை நினைவுபடுத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை, கடந்த மே 31ஆம் நாள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.