தாம் ஆளுனர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் அண்மையில் கடற்படை அதிகாரிக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதற்கு, கிழக்கு மாகாண ஆளுனரே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர்.
இந்தநிலையில், அவரைப் பதவி விலகுமாறு அரசதரப்பில் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, தாம் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்றும், அதுபோல, பதவி விலகுமாறு அரசதரப்பில் இருந்து கோரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.