தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நினைவுப் பேருரையை கொசோவோ பிரதிநிதி Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார்.
கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைக்கழகத்தில் (University of California in Los Angeles,) மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க இருப்பதோடு, பல பிரதிநிதிகளும் பங்கெடுக்க இருக்கின்றனர்.