அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர், நேற்றுமுன்தினம் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவையும், விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்களவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்தே இவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
அதேவேளை, மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.