கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ந்லையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.