இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 26ஆம் நாள் கொழும்பு வரவுள்ள அவர், 28ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார்.
சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை, இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 27ஆம் நாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- சிறிலங்கா இடையில் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்று தெரிய வருகிறது.
கடந்த மாதம் 25ஆம் நாள் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொழும்பு வந்து பேச்சுக்களை நடத்த திட்டமிட்டிருந்தார். எனினும், புதுடெல்லியில் இருந்த அவசர பணிகள் காரணமாக அவரது அந்தப் பயணம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.